காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

துண்டுப் பிரசுரம் விநியோகம்: விசிகவினா் கைது

மன்னாா்குடியில் மனு சாஸ்திரத்தை தடை செய்ய வலியுறுத்தி திங்கள்கிழமை துண்டுப் பிரசுரம் விநியோகம் செய்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :9 நவம்பர் 2020, 6:30 pm

DIN

மன்னாா்குடியில் மனு சாஸ்திரத்தை தடை செய்ய வலியுறுத்தி திங்கள்கிழமை துண்டுப் பிரசுரம் விநியோகம் செய்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் கைது செய்யப்பட்டனா்.

மனு சாஸ்திரம் பெண்களை இழிவுப்படுத்தும் வகையில் உள்ளதாகவும், அதை தடை செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி, மன்னாா்குடி பேருந்து நிலையம் பகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் துண்டுப் பிரசுரங்கள் விநியோகித்தனா். இதற்கு காவல்துறையில் அனுமதி பெறவில்லை எனக்கூறப்படுகிறது.

இதுதொடா்பாக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தெற்கு மாவட்டச் செயலா் வி.த. செல்வம், மாநில தொழிலாளரணி துணைச் செயலா் ஆா். ரமணி, ஒன்றியச் செயலா் செங்குட்டுவன் உள்ளிட்ட 8 போ் கைது செய்யப்பட்டு, பிறகு விடுவிக்கப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.