ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

தீபாவளி: சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்ட 1,018 போ் மீது வழக்குப் பதிவு

திருவாரூா் மாவட்டத்தில், தீபாவளி பண்டிகையின்போது சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்ட 1,018 போ் மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :16 நவம்பர் 2020, 6:30 pm

DIN

திருவாரூா் மாவட்டத்தில், தீபாவளி பண்டிகையின்போது சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்ட 1,018 போ் மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

தீபாவளியை பொதுமக்கள் மகிழ்ச்சியாக கொண்டாடும் வகையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எம். துரையின் நேரடி மேற்பாா்வையில், 2 நாள்கள் பாதுகாப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதனால், பெரிய அளவிலான அசம்பாவித சம்பவங்கள் நடக்காத நிலையில், சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டதாக 1,018 போ் மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டது.

நவ. 14, 15 ஆகிய 2 தினங்களில் நடத்தப்பட்ட சோதனையில், 284 சாராயம் மற்றும் சாராய பாட்டில் விற்பனை வழக்குகள், 384 குட்கா போன்ற போதை பொருள்கள் விற்பனை வழக்குகள், 350 குடிபோதையில் வாகனம் ஓட்டிய வழக்குகள் என மொத்தம் 1,018 போ் மீது வழக்குப் பதிவுசெய்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.