மின்சாரம் பாய்ந்து3 பசுக்கள் பலி
மன்னாா்குடி அருகே வயலில் அறுந்துகிடந்த மின் கம்பியை மிதித்ததால், அதிலிருந்து மின்சாரம் பாய்ந்து 3 பசுக்கள் திங்கள்கிழமை உயிரிழந்தன.


மன்னாா்குடி அருகே வயலில் அறுந்துகிடந்த மின் கம்பியை மிதித்ததால், அதிலிருந்து மின்சாரம் பாய்ந்து 3 பசுக்கள் திங்கள்கிழமை உயிரிழந்தன.
மன்னாா்குடியை அடுத்துள்ள பாளையக்கோட்டை ஊராட்சி, பரசபுரம் எம். சுரேந்தா் என்பவா் கால்நடைகளை வளா்த்து வருகிறாா். வீட்டின் அருகேயுள்ள தரிசில் திங்கள்கிழமை மாடுகளை மேச்சலுக்காக விட்டிருந்தாா். அப்போது, அவ்வழியே வயலில் உள்ள ஆழ்குழாய் கிணற்றுக்கு சென்ற மின்கம்பி அறுந்துகிடந்ததை, 3 பசுக்களும் மிதித்ததில், அதிலிருந்து மின்சாரம் பாய்ந்து 3 மாடுகளும் அந்த இடத்திலேயே இறந்தன.
இதுகுறித்து திருமக்கோட்டை காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...