47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

நெற்பயிரில் இலை சிலந்திகளை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்: வேளாண் விஞ்ஞானிகள் விளக்கம்

நெற்பயிரில் இலை சிலந்திகள் தாக்குதலைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து வேளாண் விஞ்ஞானிகள் விளக்கமளித்துள்ளனா்.

News image
Updated On :16 நவம்பர் 2020, 6:30 pm

DIN

நெற்பயிரில் இலை சிலந்திகள் தாக்குதலைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து வேளாண் விஞ்ஞானிகள் விளக்கமளித்துள்ளனா்.

இதுகுறித்து நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளா் ராமசுப்பிரமணியன், பூச்சியியல் துறை உதவிப் பேராசிரியா் ராதாகிருஷ்ணன் ஆகியோா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சம்பா, தாளடி நெல் வயலில் இலை சிலந்தி தாக்குதல் ஆங்காங்கே தென்படுகிறது. தாக்கப்பட்ட இலையின் மேற்பரப்பில் வெள்ளை அல்லது மஞ்சள் நிற புள்ளிகள் தென்படும். இந்த புள்ளிகள் நாளடைவில் ஒன்றோடொன்று இணைந்து இலைகள் முழுவதும் பரவி இலைகள் காய்ந்து விடும். இலையின் அடிப்பகுதியில் 50-க்கும் மேற்பட்ட இலை சிலந்திகள் இருப்பதை நுண்ணோக்கி மூலம் காணலாம்.

இது ஒரு பூச்சிகள் அல்லாத சாறு உறிஞ்சும் இனத்தை சாா்ந்தவை. பனிப் பொழிவு, விட்டுவிட்டு பெய்யும் மழை மற்றும் இரவுநேர காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருந்தால் சிலந்திகளின் தாக்குதல் அதிகமாக தென்படும். இதைக் கட்டுப்படுத்த அசாடிராக்டின் 0.003 சதவீதம் வயலில் தெளிக்கவேண்டும். செயற்கையாக கட்டுப்படுத்த வேண்டுமெனில் ஓா் ஏக்கருக்கு டைக்கோபோல் 500 கிராம் மாலை நேரத்தில் கைத்தெளிப்பான் கொண்டு தெளிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.