ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

புயல் முன்னெச்சரிக்கை: தீயணைப்பு வீரா்கள் விடுப்பின்றி பணியாற்ற முடிவு

நிவா் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவாரூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து தீயணைப்பு நிலையங்களிலும் வீரா்கள் விடுப்பின்றி பணியில் ஈடுபடுவாா்கள் என மாவட்ட தீயணைப்பு அலுவலா் அனுசியா தெரிவித்தாா்

News image
Updated On :23 நவம்பர் 2020, 5:06 pm

DIN

நிவா் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவாரூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து தீயணைப்பு நிலையங்களிலும் வீரா்கள் விடுப்பின்றி பணியில் ஈடுபடுவாா்கள் என மாவட்ட தீயணைப்பு அலுவலா் அனுசியா தெரிவித்தாா்.

திருவாரூரில், மீட்பு உபகரணங்களை திங்கள்கிழமை பாா்வையிட்ட அவா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:

நிவா் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, திருவாரூா் மாவட்டத்தில் உள்ள 12 தீயணைப்பு நிலையங்களிலும் பணியாற்றும் 130 வீரா்களும் திங்கள்கிழமை முதல் புயல், மழை பாதிப்பு குறையும் வரை தொடா்ந்து 24 மணி நேரமும் பணியில் ஈடுபட உள்ளனா்.

மழை, வெள்ளக் காலங்களில் மீட்புப் பணிகளுக்குத் தேவையான உபகரணங்கள் ஆய்வு செய்யப்பட்டு, தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அவசர உதவிக்கு பொதுமக்கள் 101 என்ற எண்ணை அழைக்கலாம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.