ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

புயல் எச்சரிக்கை: நெல் மூட்டைகளை இடமாற்றம் செய்திட தொழிற்சங்கம் கோரிக்கை

புயல் எச்சரிக்கைக் காரணமாக, நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மற்றும் திறந்தவெளி சேமிப்புக் கிடங்குகளில் தேங்கியுள்ள நெல் மூட்டைகளை உடனடியாக இடமாற்றம் செய்திட டிஎன்சிஎஸ்சி தொழிற்சங்கத் தலைவர் கோரிக்கை வ

News image
புயல் எச்சரிக்கை:நெல் மூட்டைகளை இடமாற்றம் செய்திட  தொழிற்சங்கம் கோரிக்கை( கோப்புப்படம்)
Updated On :24 நவம்பர் 2020, 11:55 am

DIN

புயல் எச்சரிக்கைக் காரணமாக, நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மற்றும் திறந்தவெளி சேமிப்புக் கிடங்குகளில் தேங்கியுள்ள நெல் மூட்டைகளை உடனடியாக இடமாற்றம் செய்திட டிஎன்சிஎஸ்சி தொழிற்சங்கத் தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகப் பணியாளர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் கா.இளவரி  செவ்வாய்கிழமை விடுத்துள்ள அறிக்கையில்,  “தமிழகத்தைப் புயல் தாக்கும் அபாயம் உள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் அதிக தாக்கம் இருக்கக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கீழ் செயல்படும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மற்றும் திறந்தவெளி சேமிப்புக் கிடங்குகளிலும் சுமார் 3 லட்சம் மெட்ரிக் டன்னுக்கு மேற்பட்ட நெல் மூட்டைகள் தேங்கியுள்ளன.

இந்த நெல் மூட்டைகளைச் சரியான முறையில் பாதுகாத்திட, அங்கிருந்து உடனடியாக இயக்கம் செய்திட நிர்வாகம் நடவடிக்கை எடுத்திட வேண்டும். மேலும் டெல்டா மாவட்டங்களில் செயல்படும் 26 வட்டக் கிடங்குகளில், பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட வேண்டிய அத்தியாவசியப் பொருட்களின் இருப்பினை ஆய்வு செய்து, சம்பந்தப்பட்ட தேவையுள்ள நியாயவிலைக் கடைகளுக்கு நகர்வுப் பணியை துரிதப்படுத்திட வேண்டும்” எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.