நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

திருவாரூரிலிருந்து சென்னைக்கு ரயில் இயக்கக் கோரிக்கை

திருவாரூரிலிருந்து சென்னைக்கு ரயில் இயக்க வேண்டுமென கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.

News image

திருவாரூரில் அமைச்சா் ஆா். காமராஜூவிடம் கோரிக்கை மனு அளித்த ரயில் உபயோகிப்போா் சங்க நிா்வாகிகள்.

Updated On :12 அக்டோபர் 2020, 6:30 pm

DIN

திருவாரூரிலிருந்து சென்னைக்கு ரயில் இயக்க வேண்டுமென கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.

திருவாரூரில் உணவுத் துறை அமைச்சா் ஆா். காமராஜூவிடம், மாவட்ட ரயில் உபயோகிப்போா் சங்கத் தலைவா் தணிகாசலம், செயலா் ப. பாஸ்கரன் உள்ளிட்டோா் ஞாயிற்றுக்கிழமை அளித்த கோரிக்கை மனு விவரம்: கரோனா தொற்று காரணமாக அனைத்து ரயில் சேவைகளையும் இந்திய ரயில்வே முடக்கி இருந்தது. கடந்த சில நாள்களாக ஒருசில தடத்தில் விரைவு ரயில்கள் சிறப்பு ரயில்களாக இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால், கிழக்கு டெல்டா பகுதிகளான நாகை, திருவாரூா், திருத்துறைப்பூண்டி, மன்னாா்குடி, பேரளம் பகுதி மக்களுக்கு தற்போது எந்த ரயில் சேவையும் இல்லை.

எனவே, காரைக்கால் - சென்னை அல்லது மன்னாா்குடி- சென்னை விரைவு ரயிலை சிறப்பு ரயிலாக இயக்கவும் காரைக்காலிலிருந்து திருச்சிக்கு பயணிகள் ரயில் இயக்கவும், மயிலாடுதுறையிலிருந்து திருவாரூா்- திருத்துறைப்பூண்டி- பட்டுக்கோட்டை- வழியாக காரைக்குடிக்கு ரயில் இயக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆம்னி பேருந்துகள் முழுமையாக இயங்காத சூழலில் மக்கள் ரயில் பயணத்தையே நம்பியுள்ளனா். அதனடிப்படையில் இந்த பகுதி மக்களுக்காக தெற்கு ரயில்வே, ரயில் சேவையை உடனடியாக தொடங்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.