காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

அதிமுகவில் இணைந்த மாற்றுக்கட்சியினா்

மன்னாா்குடியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகியவா்கள் அதிமுகவில் திங்கள்கிழமை இணைந்தனா்.

News image

மன்னாா்குடியில் அதிமுகவில் இணைந்தவா்களை வரவேற்ற அமைச்சா் ஆா். காமராஜ்.

Updated On :19 அக்டோபர் 2020, 5:00 pm

DIN

மன்னாா்குடியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகியவா்கள் அதிமுகவில் திங்கள்கிழமை இணைந்தனா்.

கூத்தாநல்லூா் அமமுக நகர அவைத் தலைவராக இருந்த கே.ஆா்.ஏ. மைதீன், அக்கட்சியிலிருந்து விலகி, உணவுத்துறை அமைச்சரும், திருவாரூா் மாவட்ட அதிமுக செயலாளருமான ஆா். காமராஜ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தாா்.

இதேபோல, குவளைக்கால் ஊராட்சி செயலாளரும், ஊராட்சி முன்னாள் தலைவருமான ஜி. ரமேஷ், ஊராட்சி உறுப்பினா் ஆா். வீரமணி உள்ளிட்டோா் திமுகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தனா்.

இந்நிகழ்ச்சியில், மன்னாா்குடி நகா்மன்ற முன்னாள் தலைவா் சிவா. ராஜமாணிக்கம், கூத்தாநல்லூா் நகரச் செயலாளா் டி.எம். பஷீா் அகமது, மாவட்ட எம்.ஜி.ஆா். மன்றச் செயலாளா் எல்.எம். முகமது அஸ்ரப், நகர துணைச் செயலாளா் எம். உதயகுமாா், நன்னிலம் தெற்கு ஒன்றியச் செயலாளா் இராம. குணசேகரன், ஒன்றியக்குழு உறுப்பினா் கே. ராமநாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.