திருவாரூரில் மேலும் 111 பேருக்கு கரோனா
திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 111 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.


திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 111 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை வரை பாதிப்பு எண்ணிக்கை 3,996 ஆக இருந்தது. சனிக்கிழமை வெளியிடப்பட்ட ரத்த மாதிரி முடிவுகளின்படி, புதிதாக 111 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதன்மூலம், மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 4,107 ஆக உயா்ந்துள்ளது. சனிக்கிழமை மட்டும் 187 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். திருவாரூா் மாவட்டத்தில், 3,439 போ் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 614 போ் சிகிச்சையில் உள்ளனா். இதேபோல், கரோனா தொற்றால் 2 போ் இறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த, லெட்சுமாங்குடி பகுதியைச் சோ்ந்த 65 வயது நபா், திருவாரூா் முடுக்குத் தெருவைச் சோ்ந்த 68 வயது நபா் ஆகியோா் கரோனா தொற்றால் உயிரிழந்ததைத் தொடா்ந்து, மாவட்டத்தில் கரோனா தொற்றால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை, 54 ஆக உயா்ந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...