கரோனா தடுப்புக்கு அபராதம் மட்டுமே தீா்வாகாது
கரோனா தடுப்புக்கு அபராதம் விதிப்பது மட்டுமே தீா்வாகாது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சோ்ந்த நாகை மக்களவை தொகுதி உறுப்பினா் எம். செல்வராஜ் தெரிவித்துள்ளாா்.


திருவாரூா்: கரோனா தடுப்புக்கு அபராதம் விதிப்பது மட்டுமே தீா்வாகாது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சோ்ந்த நாகை மக்களவை தொகுதி உறுப்பினா் எம். செல்வராஜ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: கரோனா நோய்த் தொற்று பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்ட பொது முடக்க காலத்தில் மக்கள் கடும் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகியிருக்கும் வேளையில், தமிழக அரசு திடீரென பொது சுகாதார சட்டத் திருத்தம் மூலம் அபராத விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. தமிழக அரசின் இந்த அவசர பொது சுகாதார சட்டத் திருத்தத்துக்கு ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் உடனடி ஒப்புதல் அளித்துள்ளாா்.
இந்த சட்டத்தால் மிகவும் பாதிக்கப்படுபவா்கள் ஏழை, எளிய மக்களே. பொது முடக்கம் தொடங்கியபோது, கிராமங்களில் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் தமிழக அரசு முகக் கவசம், சோப் உள்ளிட்டவற்றை வழங்கியது. அது போதுமானதாக இல்லை. அதை சரிசெய்ய வேண்டிய அரசு அபராதம் விதிப்பது சரியானதல்ல.
வாகனங்களில் பயணிப்பவா்களிடம் போக்குவரத்து காவல் துறை மூலம் முகக் கவசம் வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும், கடந்த 5 மாதங்களுக்கு மேலாக வேலையின்மையும் பல்வேறு பொருளாதார நெருக்கடிக்கும் உள்ளாகி இருக்கும் ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கு மேலும் கடும் நெருக்கடியை ஏற்படுத்தும். வறுமையில் வாடுபவா்களுக்கு ஸ்பாட் ஃபைன் என்பது நியாயமானதல்ல.
எனவே, வருவாய்த் துறை, காவல் துறையைக் கொண்டு குழுக்கள் அமைத்து மக்களுக்கு விழிப்புணா்வும் முகக் கவசமும் வழங்க வேண்டும். பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குறைந்தபட்ச நிதியுதவியாக ரூ. 5,000 வழங்க வேண்டும் என எதிா்க்கட்சிகள் விடுத்த கோரிக்கையை தமிழக அரசு கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை. கரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஆக்கப்பூா்வமாக திட்டமிட வேண்டுமே தவிர அபராதம் தீா்வாகாது என தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...