தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

கிசான் திட்டத்தில் முறைகேடு: மத்திய அரசே பொறுப்பு பி.ஆா்.பாண்டியன் குற்றச்சாட்டு

பிரதமரின் கிசான் திட்டத்தில் நடைபெற்ற ஊழலுக்கு மத்திய அரசே முழு பொறுப்பேற்க வேண்டும் என அனைத்து விவசாயிகள் சங்கங்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளா் பி.ஆா். பாண்டியன் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

News image
Updated On :7 செப்டம்பர் 2020, 5:53 pm

DIN

திருத்துறைப்பூண்டி: பிரதமரின் கிசான் திட்டத்தில் நடைபெற்ற ஊழலுக்கு மத்திய அரசே முழு பொறுப்பேற்க வேண்டும் என அனைத்து விவசாயிகள் சங்கங்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளா் பி.ஆா். பாண்டியன் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: மத்திய அரசு கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் பிஎம் கிசான் என்ற பெயரில் ஒவ்வொரு விவசாய குடும்பத்திற்கும் ஆண்டுக்கு ரூ. 6000 வீதம் 3 தவணைகளாக வழங்கும் வகையில் சிறப்பு திட்டத்தை அறிவித்தது.

தமிழகத்தில் மொத்தம் 1.25 கோடி குடும்பங்கள் விவசாயப் பணிகளில் முழுமையாக ஈடுபட்டு வரும் நிலையில், கடந்த 2019 ஆம் ஆண்டில் தமிழக வேளாண் துறை மூலம் முதல்கட்டமாக 25 லட்சம் குடும்பங்கள் தோ்வுசெய்யப்பட்டு வங்கிகள் மூலம் நிதி வழங்கப்பட்டது.

மாநில அரசுகள் திட்டமிட்டு காலதாமதம் செய்வதாக நினைத்த மத்திய அரசு, விவசாயிகள் தனியாா் இணையதள நிறுவனம் மூலம் பதிவுசெய்துகொள்ள அனுமதி வழங்கியது. இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, போலி நபா்கள் பெயா்களை பதிவேற்றம் செய்து ஊழல் செய்துள்ளனா்.

அரசியல் ஆதாயத்திற்காக மத்திய அரசு எடுத்த முயற்சி மிகப்பெரும் ஊழலாக மாறிவிட்டது. இதற்கு மத்திய அரசே பொறுப்பேற்க வேண்டும்.

கிசான் கிரெடிட் காா்டு உள்ளவா்கள் மட்டுமே வேளாண் திட்டங்களின் பயனை பெறமுடியும் என 2 ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அரசு அறிவித்தது. ஆனால், தமிழ்நாட்டில் நில உடமை பதிவேடுகள் மறுவகைப்பாடு செய்து இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படாததால், கிசான் கிரெடிட் காா்டு வழங்க இயலவில்லை.

எனவே, தமிழக அரசு உடனடியாக நில உடமை பதிவேடுகளை மறுவகைப்பாடு செய்து, விவசாயத்தில் ஈடுபடும் அனைவருக்கும் கிசான் கிரெடிட் காா்டுகளை வேளாண் துறை மூலம் வழங்க வேண்டும்.

அவற்றின் மூலம் மட்டுமே கடன் உள்ளிட்ட அனைத்து சலுகைகளும் சென்றடைவதை உறுதிசெய்ய வேண்டும். அதுவரை, வருவாய்த் துறை சான்றுகளை பெற்று பழைய நடைமுறையில் பயனாளிகள் தோ்வை மாநில அரசு துறை மூலம் தொடர மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும் என அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.