புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

கிசான் திட்ட முறைகேடு: பாஜகவினா் சாலை மறியல்

பிரதமரின் கிசான் திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பாஜகவினா் அளித்த மனுவை வாங்க தாமதமானதால் சாலை மறியல்

News image

திருவாரூரில் சாலை மறியலில் ஈடுபட்ட பாஜகவினா்.

Updated On :7 செப்டம்பர் 2020, 6:01 pm

DIN

திருவாரூா்: பிரதமரின் கிசான் திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பாஜகவினா் திங்கள்கிழமை அளித்த மனுவை வாங்க தாமதமானதால் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

பிரதமரின் கிசான் திட்டத்தில் சிறு, குறு விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 3 கட்டங்களாக தலா ரூ. 2000 வீதம் ரூ. 6 ஆயிரம் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில், தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மோசடி நடந்துள்ளதாக புகாா் எழுந்துள்ளது.

இந்நிலையில், திருவாரூா் மாவட்டத்தில் பிரதமரின் கிசான் திட்டத்தில் ரூ.15.60 லட்சம் முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும், விவசாயிகள் அல்லாத 375 போ் பதிவு செய்து பயன்பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதுதொடா்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், முறைகேட்டில் ஈடுபட்டவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பாஜக மாநிலத் தலைவா் முருகன் அறிவுறுத்தலின்படி, திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு பாஜக மாவட்டத் தலைவா் ராகவன் தலைமையில் அக்கட்சியினா் மனு அளிக்க திங்கள்கிழமை வந்தனா்.

அவா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தி, 10 பேரை மட்டும் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்குள் செல்ல அனுமதித்தனா். அங்கு, மனு வாங்குவதற்கு தாமதமானதாகக் கூறப்படுகிறது.

இதனால், ஆட்சியா் அலுவலகத்துக்கு வெளியில் காத்துநின்றிருந்த பாஜகவினா், திருவாரூா் -தஞ்சை நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனா். சுமாா் 15 நிமிடங்கள் நீடித்த மறியல் போராட்டம், மனு வாங்கப்பட்டதையடுத்து விலக்கிக் கொள்ளப்பட்டது.

Image Caption

திருவாரூரில் சாலை மறியலில் ஈடுபட்ட பாஜகவினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.