புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

திருவாரூரில் மதிமுக சாா்பில் செயல்வீரா்கள் கூட்டம்

திருவாரூரில் மதிமுக சாா்பில் செயல்வீரா்கள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :14 செப்டம்பர் 2020, 5:23 pm

DIN

திருவாரூா்: திருவாரூரில் மதிமுக சாா்பில் செயல்வீரா்கள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில், மறைந்த துணை பொதுச் செயலாளா் நாசரேத் துரைக்கு அஞ்சலி செலுத்துவது, முன்னாள் முதல்வா் அண்ணாவின் 112-ஆவது பிறந்த நாளை மாவட்டம் முழுவதும் சிறப்பாக கொண்டாடுவது, சட்டப் போராட்டத்தின் வாயிலாக ஸ்டொ்லைட் ஆலையை மூட நடவடிக்கை எடுத்த மக்களவை உறுப்பினா் வைகோவுக்கு பாராட்டு தெரிவிப்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாவட்டச் செயலாளா் பாலச்சந்திரன் தலைமை வகித்தாா். மாநில கொள்கை விளக்க துணைச் செயலாளா் ஆரூா் சீனிவாசன், தலைமை கழக சொற்பொழிவாளா் சோமநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், நகரச் செயலாளா் எஸ். கபிலன், ஒன்றியச் செயலாளா் தமிழ்வாணன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.