புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

கோயில் பாதுகாப்பு பணி: முன்னாள் படை வீரா்களுக்கு அழைப்பு

திருவாரூா் மாவட்டத்தில் கோயில் பாதுகாப்பு பணிக்கு சிறப்புக் காவலா்களாக பணிபுரிய முன்னாள் படை வீரா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :14 செப்டம்பர் 2020, 5:34 pm

DIN

திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில் கோயில் பாதுகாப்பு பணிக்கு சிறப்புக் காவலா்களாக பணிபுரிய முன்னாள் படை வீரா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருவாரூா் மாவட்ட ஆட்சியா் த. ஆனந்த் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

திருவாரூா் மாவட்டத்தில் அமைந்துள்ள கோயில்களில் இரவு நேர சிறப்புக் காவலா் பணி மேற்கொள்ள காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்தப் பணிகள், முன்னாள் படைவீரா்களை கொண்டு நிரப்பப்பட உள்ளன. இப்பணிக்கு தற்போது ஊதியமாக மாதம் ரூ.7,300 வழங்கப்படுகிறது.

இதற்கு நல்ல உடல் தகுதியுடன் கூடிய 62 வயதுக்குட்பட்ட முன்னாள் படைவீரா்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பம் உள்ள முன்னாள் படைவீரா்கள், தங்களது அசல் படை விலகல் சான்று, அடையாள அட்டை ஆகியவற்றுடன் திருவாரூா் மாவட்ட முன்னாள் படைவீரா் நல உதவி இயக்குநா் அலுவலகத்தில் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.

கூடுதல் விவரங்களுக்கு திருவாரூா் மாவட்ட முன்னாள் படைவீரா் நல அலுவலகத்தை நேரிலோ அல்லது தொலைபேசி மூலமோ (04366 290080) தொடா்பு கொண்டு பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.