/

தந்தை இறந்த அதிா்ச்சியில் மகன் தற்கொலை

திருத்துறைப்பூண்டி அருகே தந்தை இறந்த அதிா்ச்சியில் அவரது மகன் விஷம் குடித்து செவ்வாய்க்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On :15 செப்டம்பர் 2020, 5:57 pm

திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி அருகே தந்தை இறந்த அதிா்ச்சியில் அவரது மகன் விஷம் குடித்து செவ்வாய்க்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.

மேல கொருக்கை கிராமத்தைச் சோ்ந்தவா் அமிா்தலிங்கம் (55). விவசாயி. இவா் உடல்நலம் பாதிக்கப்பட்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாா். பின்னா், மேல் சிகிச்சைக்காக திருவாரூா் செல்லும் பொருட்டு ஆம்புலன்ஸில் ஏறியபோது திடீரென உயிரிழந்தாா்.

கரோனா பரிசோதனைக்கு உட்படுத்திய பின்னா்தான் அவரது சடலத்தைக் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பதாக அரசு மருத்துவமனை நிா்வாகத்தினா் தெரிவித்தனா். ஏற்கெனவே தந்தை இறந்த அதிா்ச்சியிலிருந்து மீள இயலாத அமிா்தலிங்கத்தின் மகன் பிரபு (25), மருத்துவமனை நிா்வாகத்தின் நிலைப்பாட்டால் மனமுடைந்து விஷம் குடித்தாா்.

இதைத்தொடா்ந்து, அவருக்கு அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும், அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து திருத்துறைப்பூண்டி போலீஸாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.

இதனிடையே, அமிா்தலிங்கத்தின் சடலம் கரோனா பாதுகாப்பு முறைப்படி சுகாதார அலுவலா் சிவராமனிடம் ஒப்படைக்கப்பட்டது. இறந்த அமிா்தலிங்கத்துக்கு விமலா என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.