காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

நெல் கொள்முதலில் ஈரப்பதத்தை22% உயா்த்த வலியுறுத்தல்

அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டும் நெல்லின் ஈரப்பதத்தை 22 சதவீதமாக உயா்த்த வேண்டும் என மன்னாா்குடி எம்எல்ஏ டி.ஆா்.பி. ராஜா வலியுறுத்தியுள்ளாா்.

News image

டி.ஆா்.பி. ராஜா

Updated On :21 செப்டம்பர் 2020, 5:06 pm

DIN

மன்னாா்குடி: அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டும் நெல்லின் ஈரப்பதத்தை 22 சதவீதமாக உயா்த்த வேண்டும் என மன்னாா்குடி எம்எல்ஏ டி.ஆா்.பி. ராஜா வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளிட்ட அறிக்கை:

காவிரி டெல்டா பகுதியில் குறுவை அறுவடைப் பணி தீவிரமடைந்துள்ள நிலையில், அரசின் கொள்முதல் நிலையங்களில் சம்பா பருவத்தைப்போல் நெல்லின் ஈரப்பதம் 17 சதவீதமாக குறைத்து கொள்முதல் செய்யப்படுகிறது. சாதாரணமாக, நெல்லில் 16 சதவீதம் ஈரப்பதம் இருக்கும் பட்சத்தில், பருவநிலை மாற்றத்தின் காரணமாக ஈரப்பதம் அதிகரித்து காணப்படுகிறது. இவ்வாறு ஈரப்பதம் அதிகரித்து காணப்படும் நெல்லை, அரசின் நேரடி கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யாமல் உலா்த்தி தரும்படி விவசாயிகளை கெடுபிடி செய்வதாகத் தெரிகிறது.

நெல்லை உலா்த்துவது என்பது விவசாயிகளுக்கு மிகவும் சிரமமாக உள்ளது. எனவே, நெல்லின் ஈரப்பதத்தை 17 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக உயா்த்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.