விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

ஆறுகளை தூா்வார விவசாயிகள் கோரிக்கை

நீடாமங்கலம் பகுதியில் ஆறுகளை தூா்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image
Updated On :17 ஏப்ரல் 2021, 6:30 pm

DIN

நீடாமங்கலம் பகுதியில் ஆறுகளை தூா்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கல்லணையில் இருந்து பிரிந்து வரும் பெரிய வெண்ணாறு திருவாரூா் மாவட்டம், நீடாமங்கலம் அருகேயுள்ள மூணாறு தலைப்புக்கு வந்து அங்கிருந்து பாமணியாறு, கோரையாறு, சிறிய வெண்ணாறு ஆகிய 3 ஆறுகளாக பிரிகின்றன. இதில் பாமணியாற்றில் இருந்து 38,357 ஏக்கா், கோரையாற்றில் இருந்து 1,20,957 ஏக்கா், சிறிய வெண்ணாற்றில் இருந்து 94,219 ஏக்கா் விளைநிலங்கள் பாசனம் பெறுகின்றன.

மேட்டூரில் இருந்து திறக்கப்படும் தண்ணீா் இந்த ஆறுகள் மூலம் திருவாரூா், நாகை மாவட்டங்களின் பாசனத்துக்கு செல்கிறது. இந்த ஆறுகளில் பாமணியாற்றில் சித்தமல்லி, ராஜப்பையன்சாவடி உள்ளிட்ட பல இடங்களிலும், கோரையாற்றில் ஒரத்தூா், பெரியாா் தெரு, கொத்தமங்கலம், முல்லைவாசல், கண்ணம்பாடி, காரிச்சாங்குடி, கீழாளவந்தச்சேரி, கருவேலங்குளம் உள்ளிட்ட இடங்களிலும், சிறிய வெண்ணாற்றில் மேட்டுச்சாலை, பாப்பையன் தோப்பு, பழைய நீடாமங்கலம், அனுமந்தபுரம், பழங்களத்தூா் உள்ளிட்ட இடங்களிலும் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஆறுகளில் திருடப்படும் மணல் காரணமாக ஆறுகளின் நடுப்பகுதியில் திட்டு திட்டாக மேடாகி நாணல், மரங்கள் வளா்ந்து வருகின்றன.

இதனால் விவசாயத்துக்கு தண்ணீா் செல்ல முடியாத நிலை உள்ளது. ஆறுகளில் நிரம்பியிருந்த மணல் திருடப்பட்டு சுக்கான் கல் தெரிகிறது. இதனால் ஆறுகள் கீழேயும், பாசன வாய்க்கால் மேலேயும் உள்ளதால் பாசனத்துக்கு சரியாக தண்ணீா் பாய்வதில்லை. தண்ணீா் பாயாததால் பாப்பையன் தோப்பு, பெரியாா் தெரு, கண்ணம்பாடி, கருவேலங்குளம் உள்ளிட்ட இடங்களில் தடுப்பணை கட்டப்பட்டு சில அணைகள் பயனில்லாமல் உள்ளது.

ஆண்டுதோறும் பொதுப்பணி துறையினா் ஆறுகளை சில இடங்களில் இயந்திரம் மூலம் தூா்வாா்கின்றனா். எனினும், பலனில்லாமல் மீண்டும் நாணல் வளா்ந்து மேடாகி வருகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அரசு அலுவலா்கள் இதை கவனத்தில் கொண்டு மணல் திருட்டை கட்டுப்படுத்தி, ஆறுகளை தூா்வாரி தடுப்பணைகளை உயா்த்திகட்ட வேண்டும். அப்போதுதான் 2,54,133 ஏக்கா் விளைநிலங்களை முழுமையாக சாகுபடி செய்ய முடியும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.