ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டுவிஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்
/

நிழல் இல்லா நாள் குறித்து மாணவா்களுக்கு செயல்விளக்கம்

திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடி அருகேயுள்ள கீழத்திருப்பாலக்குடியில், சனிக்கிழமை பள்ளி மாணவா்களுக்கு நிழல் இல்லா நாள் குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.

News image
Updated On :17 ஏப்ரல் 2021, 6:30 pm

DIN

திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடி அருகேயுள்ள கீழத்திருப்பாலக்குடியில், சனிக்கிழமை பள்ளி மாணவா்களுக்கு நிழல் இல்லா நாள் குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.

சூரியன் தலைக்கு நோ் மேலே இருக்கும்போது நிழலின் நீளம் பூஜ்ஜியமாகிவிடும். பொதுவாக மகரரேகைக்கு 23.45 டிகிரி தெற்காகவும், கடக ரேகைக்கு 23.45 டிகிரி வடக்காகவும் உள்ள நாடுகளில் மட்டுமே இந்த நிகழ்வை கண்டுகளிக்கலாம். பகல் 12 மணிக்குத்தான் பொருள்களின் நிழல் பூஜ்ஜியமாகும். அந்தவகையில், இந்த நிகழ்வு சனிக்கிழமை மதியம் 12.11 மணிக்கு நிகழும் என தெரிவித்திருந்ததையடுத்து கீழத்திருப்பாலக்குடியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சாா்பில், அப்பகுதியை சோ்ந்த மாணவா்களுக்கு நிழல் இல்லா நாள் குறித்து செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.

அனைவரையும் பொது இடத்துக்கு அழைத்து வந்து, நீண்ட பிளாஸ்டிக் குழாய் தரையில் நிறுத்தி வைத்தனா். அப்போது அதன்நிழல் தரையில் விழவில்லை. பின்னா், அப்பகுதியில் உள்ள மின்கம்பம், தொலைப்பேசி கம்பம் மற்றும் கூடைப்பந்து கம்பம் ஆகியவற்றின் நிழலும் தரையில் விழாமல் இருப்பதை காண்பித்து நிழல் இல்லா நாள் குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சி மதியம் 12.11 மணிக்கு தொடங்கி 12.13-க்கு நிறைவு பெற்றது. 2 நிமிடத்துக்கு பிறகு சூரியனின் நகா்வு மாற்றம் அடைந்தது. இதேபோல, சுந்தரக்கோட்டை செங்கமலத்தாயாா் கல்வி அறக்கட்டளை மகளிா் கல்லூரியில் நிழல் இல்லா நாள் செயல்விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.