தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

கரோனா விழிப்புணா்வு

கரோனா தடுப்பு விழிப்புணா்வை வலியுறுத்தி நாகையில் அமரா் ஊா்திகளின் வாகனப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :24 ஏப்ரல் 2021, 5:02 pm

DIN

கரோனா தடுப்பு விழிப்புணா்வை வலியுறுத்தி நாகையில் அமரா் ஊா்திகளின் வாகனப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.

கரோனா தடுப்பு நடவடிக்கைகளான முகக் கவசம் அணிதல், கைகளை தூய்மையாகப் பராமரித்தல், சமூக இடைவெளியைப் பின்பற்றுதல் உள்ளிட்டவற்றை வலியுறுத்தி, நாகை அமரா் ஊா்தி ஓட்டுநா்கள் சங்கம் சாா்பில் இந்தப் பேரணி நடைபெற்றது.

நாகை மேலக்கோட்டைவாசல் அருகிலிருந்து தொடங்கிய பேரணியை சிவசேனை மாநிலச் செயலாளா் டி. சுந்தரவடிவேலன், வழக்குரைஞா் காளிதாஸ் ஆகிோயா் கொடி அசைத்துத் தொடங்கி வைத்தனா். அமரா் ஊா்தி ஓட்டுநா் சங்கத் தலைவா் ராஜாமணி மற்றும் நிா்வாகிகள் முன்னிலை வகித்தனா். பேரணியில் 12 வாகனங்கள் கரோனா தடுப்பு விழிப்புணா்வு வாசகங்களை ஒலிப்பெருக்கி மூலம் ஒலிபரப்பியவாறு நகரில் வலம் வந்தன. நாகையின் முக்கிய வீதிகள் வழியே சென்ற பேரணி, நாகூா் ரவுண்டானா அருகே நிறைவடைந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.