நெற்பயிரில் இலைச்சுருட்டுப் புழுக்களைகட்டுப்படுத்தும் வழிமுறைகள்: வேளாண் அலுவலா் விளக்கம்
நெற்பயிரைத் தாக்கும் இலைச் சுருட்டுப் புழுக்களை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து வலங்கைமான் வேளாண் உதவி இயக்குநா் பாலசுப்பிரமணியன் விளக்கமளித்துள்ளாா்.


நெற்பயிரைத் தாக்கும் இலைச் சுருட்டுப் புழுக்களை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து வலங்கைமான் வேளாண் உதவி இயக்குநா் பாலசுப்பிரமணியன் விளக்கமளித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பரிந்துரைக்கப்பட்ட அளவிற்கு அதிகமாக தழைச்சத்து இடப்பட்ட நெல் வயல்களில் நெற்பயிரின் இலைகள் மிகுந்த பச்சை நிறத்தில் காணப்படும். இதில் இலைச் சுருட்டுப் புழுக்களின் தாக்குதல் அதிகம் தென்படும்.
நெற்பயிா்களின் இடையில் கயிறுகட்டி பயிரின் ஊடே இழுப்பதன் மூலம் இலைச்சுருட்டு புழுக்களை அழிக்கலாம். வேப்பங்கொட்டைச் சாறு 5 சதவீதம் அல்லது வேப்ப எண்ணெய் 2 சதவீதம் தெளிப்பதன் மூலம் பெரும்பாலான பூச்சிகளை கட்டுப்படுத்தலாம். நாற்று நட்ட 30 நாட்கள் கழித்து ஏக்கருக்கு 1 கிலோ சூடோமோனாஸ் பாக்டீரியா கலவையை 50 கிலோ மக்கிய சாண எரு அல்லது மணலுடன் கலந்து இடலாம்.
பூச்சிகளின் தாக்கம் அதிகம் இருப்பின் குளோா்பைரிபாஸ் 20 இ சி 500 மிலி அல்லது தயோமித்தாக்சம் 25 டபுள்யூ. டிஜி 40 கிராம் இவற்றில் ஏதேனும் ஒரு பூச்சிக்கொல்லி மருந்தை காலை அல்லது மாலை வேளையில் வயல்களில் தெளித்து பூச்சிகளை கட்டுப்படுத்தலாம் எனத் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...