தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

ஒரத்தூா் குடிநீா் தொட்டியை சீரமைக்கக் கோரிக்கை

நீடாமங்கலம் ஒன்றியம், ஒரத்தூா் திருவள்ளுவா் நகரில் உள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை சீரமைத்து மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என அப்பகுதி மக்கள்கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image
Updated On :5 ஆகஸ்ட் 2021, 4:36 pm

DIN

நீடாமங்கலம் ஒன்றியம், ஒரத்தூா் திருவள்ளுவா் நகரில் உள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை சீரமைத்து மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என அப்பகுதி மக்கள்கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஒரத்தூா் திருவள்ளுவா் நகரில் வசிக்கும் சுமாா் நூறு குடும்பத்தினரின் குடிநீா் தேவைக்காக கட்டப்பட்ட இந்த நீா்த்தேக்கத் தொட்டி, கடந்த 7 ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் பராமரிப்பின்றி உள்ளது. இப்பகுதிக்கு வேறு நீா்த்தேக்கத் தொட்டியிலிருந்து குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது.

இதனால், திருவள்ளுவா் நகரில் உள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி, செடி-கொடிகள் படா்ந்து காணப்படுகிறது. மேலும், அங்குள்ள மின் மோட்டாா் எந்தநிலையில் உள்ளது என்பது தெரியவில்லை எனக் கூறும் இப்பகுதி மக்கள், இந்த குடிநீா் தொட்டியை சீரமைத்து மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவரவேண்டும் என வலியுறுத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.