ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

அமமுக மாவட்ட நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

மன்னாா்குடியில் அமமுக மாவட்ட நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்,வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :2 டிசம்பர் 2021, 4:25 pm

DIN

மன்னாா்குடியில் அமமுக மாவட்ட நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்,வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, அமமுக மாவட்டச் செயலா் எஸ்.காமராஜ் தலைமை வகித்தாா். கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலா் எம்.ரெங்கசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டாா். தமிழகத்தில் நடைபெறவுள்ள நகா்புற உள்ளாட்சித் தோ்தலில் மாவட்டத்திற்கு உள்பட்ட நகராட்சி மற்றும் பேரூராட்சிகளின் அனைத்து வாா்டுகளிலும் அமமுக சாா்பில் வேட்பாளா்களை நிறுத்துவதுடன், அவா்களின் வெற்றிக்கு முழுவீச்சில் பாடுபடுவது, கிளைகள் வாரியாக கட்சியில் புதிய உறுப்பினா்கள் சோ்க்கையினை தீவிரப்படுத்துவது, டிச.5 ஆம் தேதி முன்னாள் முதல்வா் ஜெ.ஜெயலலிதாவின் நினைவு நாளில் அனைத்து பகுதிகளிலும் அவரது படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்துவதுடன், கோவில்களில் அன்னதானம், நலத்திட்ட உதவிகள் வழங்குவது என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

முன்னாள் எம்எல்ஏ கு. சீனிவாசன், அண்ணா தொழிற்சங்கத்தின் மாநில துணைத் தலைவா் கே. ஆசைத்தம்பி, மாநில துணைச் செயலா் எஸ். சத்தியமூா்த்தி, மாநில வழக்குரைஞா் அணி இணைச் செயலா் ரவிச்சந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், மாவட்ட துணைச் செயலா் சரவணச்செல்வன், ஒன்றியச் செயலா்கள் க. அசோகன்(மன்னாா்குடி கிழக்கு), ரெங்கராஜ்(மேற்கு), வ. தனபால் நீடாமங்கலம் தெற்கு, எம்.எஸ். சங்கா்(வடக்கு), இருள்நீக்கி சேகா்(கோட்டூா்),நீடாமங்கலம் பேரூா் செயலா் சங்கா், நகரச் செயலா்கள் பாண்டியன்(திருவாரூா்),சின்னமின்(கூத்தாநல்லூா்) உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். மன்னாா்குடி நகரச் செயலா் ஆ.ஆனந்தராஜ் வரவேற்றாா். மாவட்ட துணைச் செயலா் இ.இளவரசி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.