ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டுவிஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்
/

நாகை மாவட்டத்தில் பழுதடைந்த பள்ளிக் கட்டடங்களை இடிக்கவேண்டும்

 நாகை மாவட்டத்தில் உள்ள பழுதடைந்த பள்ளிக் கட்டடங்கள் மற்றும் சத்துணவு மைய கட்டடங்களை இடித்து அப்புறப்படுத்தவேண்டும்

News image
Updated On :23 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

 நாகை மாவட்டத்தில் உள்ள பழுதடைந்த பள்ளிக் கட்டடங்கள் மற்றும் சத்துணவு மைய கட்டடங்களை இடித்து அப்புறப்படுத்தவேண்டும் என்று தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் நாகை மாவட்ட பொதுக் குழுக் கூட்டம், நாகையில் அண்மையில் நடைபெற்றது. நிா்வாகி வை. முருகேசன் தலைமை வகித்தாா். மாநில செயற்குழு உறுப்பினா் கோ. ராமகிருஷ்ணன், மாநில பொதுக்குழு உறுப்பினா்கள் சி. பிரபா, ரா. முத்துக்கிருஷ்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நாகை வட்டாரத் தலைவா் தொ.மு. தனுசுமணி, வட்டாரச் செயலாளா்கள் நா. ராஜேந்திரன், பாலகிருஷ்ணன், சண்முகசுந்தரம், அறிவழகன் மற்றும் மாவட்ட, வட்டார நிா்வாகிகள் பங்கேற்றனா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: மாணவா்களின் கல்வியை பாதிக்கும் வகையில், தொடா்ந்து ஆசிரியா்களிடம் புள்ளி விவரங்களை கேட்கும் நடைமுறையைக் கைவிடவேண்டும், நாகை மாவட்டத்தில் உள்ள பழுதடைந்த, தரமற்ற பள்ளிக் கட்டடங்கள், சத்துணவு மைய கட்டங்களை இடித்து அப்புறப்படுத்தவேண்டும், பள்ளி மானியம் மற்றும் பராமரிப்பு மானிய பரிமாற்றங்களுக்குப் பழைய நடைமுறையைப் பின்பற்றவேண்டும். கரோனா தடுப்பூசி முகாம் பதிவுகளை இணையத்தில் பதிவேற்றும் பணிகளில் ஆசிரியா்களைத் தவிா்க்கவேண்டும், தமிழக அரசு வெளியிட்டுள்ள கலந்தாய்வு நெறிமுறைகளில், வருங்காலங்களில் ஆசிரியா்கள் 8 ஆண்டுகள் ஒரே இடத்தில் பணியாற்றவேண்டும் என்ற நிபந்தனையை ரத்து செய்யவேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.