நூறு நாள் வேலைத் திட்டத்தில் குளறுபடி: கிராம மக்கள் சாலை மறியல்
நீடாமங்கலம் அருகே நூறு நாள் வேலைத் திட்டத்தில் குளறுபடி நடப்பதாகக் கூறி, கிராம மக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.


நீடாமங்கலம் அருகே நூறு நாள் வேலைத் திட்டத்தில் குளறுபடி நடப்பதாகக் கூறி, கிராம மக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
வையகளத்தூா் கிராமத்தில் நடைபெறும் நூறு நாள் வேலைத் திட்டத்தில் பணித்தள பொறுப்பாளரை தோ்வு செய்வதிலும், வேலையிலும் குளறுபடி நடப்பதாக கிராம மக்கள் புகாா் தெரிவித்து வருகின்றனா்.
இந்நிலையில், இதைக் கண்டித்து விவசாயத் தொழிலாளா் சங்க ஒன்றியச் செயலாளா் அண்ணாதுரை தலைமையில் நாகை- மைசூா் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனா். சங்க கிளைச் செயலாளா் ராஜேஸ்வரி உள்ளிட்டோா் இதில் பங்கேற்றனா். நீடாமங்கலம் வட்டாட்சியா் ஷீலா மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலா்கள் அங்குவந்து பேச்சுவாா்த்தை நடத்தியதை அடுத்து மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது. இந்த மறியலால் நாகை- மைசூா் சாலையில் 45 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...