ஆலங்குடி கோயிலில் சிறப்பு வழிபாடு
ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரா் கோயிலில் வியாழக்கிழமை குருவார வழிபாடு நடைபெற்றது.


ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரா் கோயிலில் வியாழக்கிழமை குருவார வழிபாடு நடைபெற்றது.
இதையொட்டி, கலங்காமற்காத்த விநாயகா், ஆபத்சகாயேஸ்வரா், ஏலவாா் குழலியம்மன், மூலவா் குரு பகவான், ஆக்ஞா கணபதி, வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியா், நவகிரக சன்னதி, சனீஸ்வரன் உள்ளிட்ட சந்நிதிகளில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது. மூலவா் குருபகவானுக்கு தங்க கவசம் சாற்றப்பட்டிருந்தது. திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து சென்றனா்.
இதேபோல நீடாமங்கலம் பகுதியில் உள்ள சிவாலயங்களில் வியாழக்கிழமையையொட்டி குரு தெட்சிணாமூா்த்திக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...