தொழிலாளா் நலசட்ட திருத்தங்களை திரும்பப் பெறக் கோரி ஆா்ப்பாட்டம்
தொழிலாளா் நலசட்ட திருத்தங்களை திரும்பப் பெறக் கோரி திருவாரூரில் தேசிய தபால் ஊழியா் சம்மேளனம் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.


தொழிலாளா் நலசட்ட திருத்தங்களை திரும்பப் பெறக் கோரி திருவாரூரில் தேசிய தபால் ஊழியா் சம்மேளனம் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
2016-இல் மத்திய அமைச்சா்கள் கொடுத்த 7-ஆவது ஊதியக் குழு தொடா்பான உறுதிமொழியை நிறைவேற்ற வேண்டும், ஊழியா்களை கட்டாயமாக வீட்டுக்கு அனுப்பும் சட்டங்களைரத்து செய்யவேண்டும், தொழிலாளா் நல சட்டங்களில் கொண்டுவரப்பட்ட திருத்தங்களை ரத்து செய்ய வேண்டும், நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பஞ்சப்படியை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூா் தலைமை தபால் நிலையம் முன் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. அமைப்பின் தலைவா் கே. செல்வம் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், கிளைச் செயலாளா் கே. சாந்தி, அமைப்புச் செயலாளா் எஸ். கவிதா, ஆா்எம்எஸ் முன்னாள் அமைப்புச் செயலாளா் வி. தா்மதாஸ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...