அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளை விட வியாபாரிகளுக்கே முன்னுரிமை அளிக்கப்படுவதாக நன்னிலம் பகுதி விவசாயிகள் குற்றச்சாட்டுத் தெரிவித்து, மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு செய்து விரைந்து நடவடிக்கை எடுத்திட வேண்டுமெனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் மற்றும் குடவாசல் பகுதிகளில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பல்வேறு குளறுபடிகள் நடப்பதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர். விவசாயிகளை விட வியாபாரிகளுக்கே முன்னுரிமை அளித்து, அவர்கள் கொண்டு வரும் நெல் மூட்டைகளை உடனடியாக கொள்முதல் செய்து வியாபாரிகளிடமிருந்து, கொள்முதல் செய்யும் ஒவ்வொரு நெல் மூட்டைக்கும் ரூபாய் 50க்கு மேல் லஞ்சம் பெறுவதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

இதன் காரணமாக விவசாயிகள் கொண்டு வரும் நெல் முட்டைகளை விற்பனை செய்வதற்கு, வாரக் கணக்கில் காத்திருக்கவேண்டிய நிலை ஏற்படுகிறது. எவ்வித பாதுகாப்புமின்றி சாலையோரத்தில் பல நாள்கள் நெல் மூட்டைகளை அடுக்கி வைப்பதன் காரணமாக, ஆடு, மாடு, பன்றிகளால் நெல் மூட்டைகளுக்குப் பாதிப்பு ஏற்படுவதாகவும் குற்றம்சாட்டுகின்றனர். காலை 7 மணி முதல் மதியம் ஒரு மணி வரையும், மாலை 3 மணி முதல் 9 மணி வரையும் நெல் கொள்முதல் செய்திட அரசு நடவடிக்கை எடுத்திட வேண்டுமெனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.
குறுகிய காலமே நடைபெறும் நெல் கொள்முதல் பணிக்கு, விடுமுறை விடுவதைத் தவிர்த்திட வேண்டும். விடுமுறை இன்றி தொடர்ந்து தினசரி கொள்முதலை நடத்திட வேண்டும். கொள்முதல் நிலையத்திற்கு விவசாயிகள் கொண்டு வரும் நெல் மூட்டைகளை அடுக்கி வைப்பதற்கு வசதியாக, கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை உடனடியாக இயக்கம் செய்திட வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகள் மீது தமிழக அரசும், மாவட்ட ஆட்சித் தலைவரும் விவசாயிகளுக்குப் பயன் அளிக்கும் வகையில் உடனடியாக, விரைந்து நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

மேலும் அதிகாரிகள் தொடர்ந்து நெல் கொள்முதல் நிலையங்களை தினசரி ஆய்வுசெய்து, குறைகளைக் களைந்திட வேண்டுமென தமிழக விவசாயிகள் நலச்சங்க தலைவர் ஜி.சேதுராமன், உள்ளிட்ட பல்வேறு விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாட்டில் முதல்முறையாக ஏஐ அடிப்படையிலான பன்மொழி சேவைகள்: பெங்களூரு காவல்துறை அறிமுகம்!

கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி.. சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் சரிவு!

கோஹினூர் வைரத்தை இந்தியாவிடம் கொடுக்க பிரிட்டன் மன்னரிடம் கோருவேன்! மம்தானி
மே 4 - எங்கும் தாமரை மலரும்! பாஜக
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


