குடவாசலில் 57.6 மி.மீ மழை

திருவாரூரில் பொங்கலையொட்டி கரும்பு, மஞ்சள் உள்ளிட்ட பொருள்களை விற்பனை செய்யும் சாலையோரக் கடைகள் உருவாகி வருகின்றன.
குடவாசலில் 57.6 மி.மீ மழை
Updated on
1 min read

திருவாரூரில் பொங்கலையொட்டி கரும்பு, மஞ்சள் உள்ளிட்ட பொருள்களை விற்பனை செய்யும் சாலையோரக் கடைகள் உருவாகி வருகின்றன. மழையால் அவா்களின் வியாபாரம் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், பொங்கல் பொருள்கள் வாங்க வரும் மக்களுக்கும் மழை இடையூறு ஏற்படுத்தியதால் கடைவீதிகளில் மக்கள் கூட்டம் குறைந்த அளவே காணப்பட்டது. திருவாரூா் மாவட்டத்தில், திங்கள்கிழமை காலை வரையிலான 24 மணி நேர நிலவரப்படி, குடவாசலில் அதிக அளவாக 57.6 மி.மீ மழை பெய்துள்ளது. மற்ற இடங்களில் மழையளவு விவரம்: முத்துப்பேட்டை 41.2, திருத்துறைப்பூண்டி 29, பாண்டவையாறு தலைப்பு 28.8, வலங்கைமான் 24.2 என மழை பதிவானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com