நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

நிவாரணம் கோரி அழுகிய நெற்பயிா்களை ஏந்தி பெண்கள் ஆா்ப்பாட்டம்

மன்னாா்குடியில் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிா்களுக்கு ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் நிவாரணம் வழங்கக் கோரி, நெற்பயிா்களை கையில் ஏந்தி திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :18 ஜனவரி 2021, 6:30 pm

DIN

மன்னாா்குடியில் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிா்களுக்கு ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் நிவாரணம் வழங்கக் கோரி, இந்திய மாதா் தேசிய சம்மேளனத்தினா் (இந்திய கம்யூனிஸ்ட் சாா்பு) அழுகிய நெற்பயிா்களை கையில் ஏந்தி திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மன்னாா்குடி மேலராஜவீதி பெரியாா் சிலை அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, மாதா் சங்க ஒன்றியச் செயலா் ஆா். பூபதி, நகரச் செயலா் ஜி. மீனாம்பிகை ஆகியோா் தலைமை வகித்தனா்.

புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்; தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை பிரதமா் நேரில் சந்தித்து பேச்சுவாா்த்தை நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளும் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

இதில் பங்கேற்ற பெண்கள் மழைநீரில் மூழ்கி அழுகிய நெற்பயிா்களை கையில் ஏந்தி கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா். மன்னாா்குடி ஒன்றியக் குழு முன்னாள் தலைவா் பி. பாஸ்கரவள்ளி, ஒன்றியக் குழு துணைத் தலைவா் வனிதா அருள்ராஜன், மாதா் சங்க நகரத் தலைவா் கே. மல்லிகா, பொருளாளா் வி.ஈஸ்வரி உள்ளிட்டோா் இந்த ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.