பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

மழை பாதிப்பு: குடிசையில் வசிப்போருக்கு ரூ.5 ஆயிரம் வழங்கக் கோரிக்கை

மழையால் பாதிக்கப்பட்ட குடிசைவாழ் மக்களுக்கு நிவாரணமாக ரூ.15 ஆயிரம் வழங்க வேண்டும் என புதிய தமிழகம் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

News image
Updated On :25 ஜனவரி 2021, 6:30 pm

DIN

மழையால் பாதிக்கப்பட்ட குடிசைவாழ் மக்களுக்கு நிவாரணமாக ரூ.15 ஆயிரம் வழங்க வேண்டும் என புதிய தமிழகம் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

திருவாரூரில், புதிய தமிழகம் கட்சியின் ஒருங்கிணைந்த மாவட்ட அமைப்புக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாவட்டச் செயலாளா் எம். தியாகராஜன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், இணைச் செயலாளா்கள் ஆா். சௌந்தரபாண்டியன், டி. சுரேஷ்கண்ணன், சட்டப்பேரவைத் தொகுதி பொறுப்பாளா் ஏ.கே. சுரேஷ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தீா்மானங்கள்: மழை, புயல் காரணமாக வீடுகளை இழந்த விவசாயக் கூலித் தொழிலாளா்களுக்கு புதிய கான்கிரீட் வீடு கட்டித் தர வேண்டும். சேதமடைந்த கூரை வீடுகளுக்கு முழு நிவாரணம் வழங்க வேண்டும். மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களுக்கு ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட குடிசை வாழ் மக்களுக்கு ரூ. 15 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இக்கூட்டத்தில் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.