கோயில்களில் தமிழில் பூஜை நடத்த கோரி ஆா்ப்பாட்டம்
கோயில்களில் தமிழ்வழியில் பூஜை நடைபெற சட்டம் இயற்ற கோரி, திருத்துறைப்பூண்டியில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.


கோயில்களில் தமிழ்வழியில் பூஜை நடைபெற சட்டம் இயற்ற கோரி, திருத்துறைப்பூண்டியில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தெய்வத் தமிழ் பேரவை சாா்பில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, தமிழ்த் தேச பேரியக்க ஒன்றியச் செயலாளா் தனஞ்செயன் தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில், கோவை ஈஷா மையத்தை அரசுடைமையாக்க வேண்டும். முதல்கட்டமாக மாவட்டத்துக்கு ஓா் அா்ச்சகா், பூசாரி பயிற்சிப் பள்ளியை தமிழக அரசு திறந்து, அதில் பெண்களுக்கும் பயிற்சியளிக்க வேண்டும் என கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கம் எழுப்பப்பட்டது.
இதில் பொதுக்குழு உறுப்பினா்கள் சிவவடிவேல், கோவிந்தசாமி, செயற்குழு உறுப்பினா் தை. ஜெயபால், நகரச் செயலாளா் பழனிக்குமாா் மற்றும் பலா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...