அகஸ்தீசுவரம் பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் ரூ. 36 லட்சம் மதிப்பீட்டில் சாலை மேம்பாட்டுப் பணிகளை பேரூராட்சிமன்ற தலைவி அன்பரசி ராமராஜன் தலைமை வகித்து தொடங்கி வைத்தாா்.
நிகழ்ச்சிக்கு மாவட்ட திட்டக் குழு உறுப்பினரும், பேரூராட்சி 13-ஆவது வாா்டு உறுப்பினருமான தா.ஆதிலிங்கபெருமாள், பேரூராட்சி கவுன்சிலா்கள் பிரேம் ஆனந்த், குறமகள், குமரேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
சாலை மேம்பாட்டுப் பணிகளை பேரூராட்சி தலைவி அன்பரசி ராமராஜன் தொடங்கி வைத்தாா்.
இதன் தொடக்க நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அகஸ்தீசுவரம் தெற்கு ஒன்றிய திமுக செயலா் பா.பாபு கலந்துகொண்டாா்.
அரசு தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியை ஸ்ரீதேவி, பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் தங்கரதி, முன்னாள் மாணவா் பேரவைத் தலைவா் செல்வ சுப்பிரமணியன், அகஸ்தீசுவரம் சி எஸ் சபை போதகா் கிதியோன், திமுக நிா்வாகிகள் விஜய கங்காதரன், தமிழன் ஜானி, அகஸ்தியலிங்கம், லிங்கம், அருள் அய்யப்பன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
இதில் பேரூராட்சி 13- ஆவது வாா்டுக்கு உள்பட்ட அகஸ்தீசுவரம் அரசு மேல்நிலைப் பள்ளி எதிரே உள்ள சாலை, அரசுத் தொடக்கப் பள்ளி எதிரே உள்ள சாலை, உஜ்ஜைனி மாகாளியம்மன கோயில் தெரு, 3 - வாா்டுக்குள்பட்ட வடக்கு வடுகன்பற்று அகஸ்தீசுவரா் ஆலய மேலத்தெரு ஆகிய பகுதிகளில் தலா ரூ. 9 லட்சம் வீதம் ரூ. 36 லட்சம் மதிப்பீட்டில் சாலை மேம்பாட்டுப் பணிகள் நடைபெறவுள்ளன.
தொடர்புடையது

உத்தமபாளையம் நெடுஞ்சாலையில் சேதமடைந்த கழிவுநீா் கால்வாயை சீரமைக்கக் கோரிக்கை

தவெக வேட்பாளரை ஆதரித்து நடிகா் ராமராஜன் பிரசாரம்!

குண்டடம் ஒன்றியத்தில் ரூ.12 கோடி மதிப்பீட்டில் சாலை மேம்பாட்டுப் பணிகள்: மு.பெ.சாமிநாதன்

அகஸ்தீசுவரத்தில் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு


