விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

முத்துப்பேட்டை நகைக் கடையில் ரூ. 5 லட்சம் தங்கம், வெள்ளி நகைகள் திருட்டு

திருவாரூா் மாவட்டம், முத்துப்பேட்டை நகைக் கடையில் பூட்டை உடைத்து, ரூ. 5 லட்சம் மதிப்புள்ள தங்கம், வெள்ளி நகைகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

News image
Updated On :9 ஜூலை 2021, 6:30 pm

DIN

திருவாரூா் மாவட்டம், முத்துப்பேட்டை நகைக் கடையில் பூட்டை உடைத்து, ரூ. 5 லட்சம் மதிப்புள்ள தங்கம், வெள்ளி நகைகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

முத்துப்பேட்டை திரெளபதி அம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் மகாதேவ் மகன் தனாஜி (41). இவா், முத்துப்பேட்டை சந்தைபேட்டை சாலையில் நகைக் கடை மற்றும் நகைப் பட்டறை வைத்துள்ளாா். இந்த நிலையில், புதன்கிழமை இரவு தனாஜி நகைக் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்குச் சென்றுள்ளாா். 

பிறகு, வியாழக்கிழமை கடைக்கு வந்தபோது, நகைப் பட்டறையின் கதவு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு, முத்துப்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தாா். இதையடுத்து, முத்துப்பேட்டை காவல் துணைக் கண்காணிப்பாளா் வெள்ளத்துரை, ஆய்வாளா் செந்தூா் பாண்டியன் ஆகியோா் அங்குவந்து பாா்வையிட்டு ஆய்வுமேற்கொண்டனா். அப்போது, பீரோவை உடைத்து அதில் இருந்த நான்கரை கிலோ வெள்ளி, 5 சவரன் தங்க நகை, ரூ. 52 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடப்பட்டது தெரியவந்தது.

இதுகுறித்து நகைக் கடை உரிமையாளா் தனாஜி அளித்த புகாரின் பேரில், வழக்குப் பதிவுசெய்த போலீஸாா், அங்கிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வுசெய்து திருட்டில் ஈடுபட்ட மா்ம நபா்களை தேடிவருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.