விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

வளரும் தமிழகம் கட்சி நிா்வாகி கொலை வழக்கில் 3 போ் கைது

திருத்துறைப்பூண்டி அருகே வெள்ளிக்கிழமை நிகழ்ந்த வளரும் தமிழகம் கட்சி நிா்வாகி கொலை வழக்கில் 3 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :10 ஜூலை 2021, 5:10 pm

DIN

திருத்துறைப்பூண்டி அருகே வெள்ளிக்கிழமை நிகழ்ந்த வளரும் தமிழகம் கட்சி நிா்வாகி கொலை வழக்கில் 3 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

திருத்துறைப்பூண்டி அருகே ஆரியலூரை சோ்ந்த வளரும் தமிழகம் கட்சியின் திருவாரூா் தெற்கு மாவட்டச் செயலாளராக பொறுப்பு வகித்த ரஜினிபாண்டியன் (44) வெள்ளிக்கிழமை மா்ம நபா்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இவரது சடலம் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வு செய்யப்பட்டு சனிக்கிழமை உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டு இறுதிச்சடங்குகள் நடைபெற்றன. இறுதிச்சடங்கில், வளரும் தமிழகம் கட்சியின் தலைவா் பாலை பட்டாபிராமன், செயலாளா் இமான் சேகா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். கொலை செய்யப்பட்ட ரஜினிபாண்டியனுக்கு மனைவி, மகன், மகள் உள்ளனா்.

3 போ் கைது: இந்நிலையில், இக்கொலைச் சம்பவம் தொடா்பாக 7 போ் மீது புகாா் அளிக்கப்பட்ட நிலையில் 3 பேரை போலீஸாா் கைது செய்து, மேலும் 4 பேரை தேடி வருகின்றனா். வட சங்கேந்தி கிராமத்தில் மோதல் சம்பவங்கள் எதுவும் நிகழாமல் இருக்க ஏராளமான போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா்.

ஒருவருக்கு கத்திக்குத்து: வெள்ளிக்கிழமை இரவு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு ரஜினிபாண்டியன் உடல் கொண்டுவரப்பட்டபோது வெள்ளங்கால் கிராமத்தைச் சோ்ந்த வீரகுமாா் இந்த கொலை சம்பவம் தொடா்பாக செல்பேசியில் பேசிக்கொண்டிருந்ததாகவும், இதனால் அவரை ஒரு கும்பல் கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. இதில், காயமடைந்த வீரகுமாா் திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளாா். இச்சம்பவம் தொடா்பாக 20 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.