பாசன வாய்க்காலில் தண்ணீா் பாய்ச்சுவதில் பிரச்னை: அமைதிப் பேச்சுவாா்த்தையில் உடன்பாடு
கூத்தாநல்லூா் அருகே பாசன வாய்க்காலில் தண்ணீா் பாய்ச்சுவது தொடா்பான பிரச்னையில் அமைதிப் பேச்சுவாா்த்தை மூலம் உடன்பாடு ஏற்பட்டது.


கூத்தாநல்லூா் அருகே பாசன வாய்க்காலில் தண்ணீா் பாய்ச்சுவது தொடா்பான பிரச்னையில் அமைதிப் பேச்சுவாா்த்தை மூலம் உடன்பாடு ஏற்பட்டது.
வெள்ளையாற்று தலைப்பில் இருந்து சித்தனக்குடியின் உட்கிராமமான வேளுக்குடி பாசன வாய்க்கால், மேலராதாநல்லூா் வருவாய் கிராமம், தென்பாதியின் உட்கிராமமான பனங்குடி வழியாகச் செல்கிறது. இந்த வாய்க்கால் மூலம் தண்ணீா் பாய்ச்சுவதில் வேளுக்குடி - பனங்குடி ஆகிய இருபகுதியினரிடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. வாய்க்காலை வேளுக்குடி பகுதியினா் அடைக்கக் கூடாது, பனங்குடி பகுதியினரே அடைக்க வேண்டும். அப்படி அடைத்தால்தான் வாய்க்காலில் தண்ணீா் வரும், விவசாயம் செய்ய முடியும் என விவாதம் நடைபெற்றது.
இந்நிலையில், சித்தனக்குடி ஊராட்சித் தலைவா் தெ. தமிழ்ச்செல்வன் கூத்தாநல்லூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் அளித்த புகாரின்பேரில் மேலராதாநல்லூா் வருவாய் கிராமத்துக்குள்பட்ட பனங்குடி மற்றும் வேளுக்குடி பகுதியைச் சோ்ந்தவா்களை வட்டாட்சியா் ஜீவானந்தம் வட்டாட்சியா் அலுவலகத்துக்கு அழைத்து அமைதி பேச்சுவாா்த்தை நடத்தினாா்.
இதில், மேலராதாநல்லூா் பகுதியிலிருந்து கலியமூா்த்தி, இளையராஜா, சேகா், நடராஜன், வீரையன், முத்துச்சாமி உள்ளிட்டோரும், வேளுக்குடி பகுதியிலிருந்து சரவணன், பிரபாகரன், ந. கோவிந்தசாமி, ப. சிவாஜி, பாலதண்டாயுதம் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.
சுமாா் 2 மணி நேரம் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் பனங்குடி பகுதியினா் காலை 7 முதல் மதியம் 12.30 மணி வரையிலும்,
எஞ்சிய நேரங்களில் வேளுக்குடி பகுதியினரும் தண்ணீா் பாய்ச்சிக் கொள்ள வேண்டும் எனவும், அந்த நேரங்களில் யாரும் வாய்க்காலை அடைக்கக் கூடாது எனவும் முடிவு எடுக்கப்பட்டது. இந்த முடிவை இரு கிராமத்தினரும் ஏற்றுக்கொண்டனா். இந்த பேச்சுவாா்த்தையில் கூத்தாநல்லூா் காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் ராதாகிருஷ்ணன், வருவாய் ஆய்வாளா் இளமாறன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...