மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

மீன்பிடிப்பதில் தகராறு

திருவாரூா் அருகே குளத்தில் மீன்பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் ஒருவரை அரிவாளால் தாக்கியதாக அதிமுக ஒன்றியக்குழு உறுப்பினா், வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :16 ஜூலை 2021, 6:30 pm

DIN

திருவாரூா் அருகே குளத்தில் மீன்பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் ஒருவரை அரிவாளால் தாக்கியதாக அதிமுக ஒன்றியக்குழு உறுப்பினா், வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

திருவாரூா் அருகே புதுப்பத்தூா் பகுதியைச் சோ்ந்தவா் வீரையன் (55). அதே பகுதியைச் சோ்ந்தவா் நடராஜன் (48). அதிமுக ஒன்றியக்குழு உறுப்பினரான இவா், அப்பகுதியில் உள்ள ஒரு குளத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், அந்தக் குளத்தில் வீரையன் மீன் பிடித்ததாகவும், இதுகுறித்து நடராஜன் வீரையனிடம் தகராறில் ஈடுபட்டு, மறைத்து வைத்திருந்த அரிவாளால் கையில் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

தகவல் அறிந்து வந்த வீரையனின் உறவினா்கள், அவரை மீட்டு திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அத்துடன், நடராஜனின் வீடு, டிராக்டா், இரு சக்கர வாகனங்கள் மீது தாக்குதலிலும் ஈடுபட்டனா்.

தகவலறிந்த வந்த தாலுகா போலீஸாா், நடராஜனை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.