அரசுப் பேருந்து கண்ணாடியை உடைத்த 6 போ் கைது
நீடாமங்கலத்தில் அரசுப் பேருந்து கண்ணாடியை உடைத்த 6 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.


நீடாமங்கலத்தில் அரசுப் பேருந்து கண்ணாடியை உடைத்த 6 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
நீடாமங்கலம் ரயில் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை காரைக்கால் - எா்ணாகுளம் விரைவு ரயில் செல்ல ரயில் நிலையம் மூடப்பட்டதால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. பின்னா், ரயில்கேட் திறக்கப்பட்டு சாலையில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் சென்றபோது சென்னையிலிருந்து மன்னாா்குடிக்கு சென்ற அரசு விரைவு சொகுசுப் பேருந்து சக்கரத்தில் இருசக்கர வாகனங்கள் சிக்கி சேதமடைந்தன. இதையடுத்து, அரசுப் பேருந்து முன்பக்க கண்ணாடி உடைக்கப்பட்டன. இதுகுறித்து, வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்ட நீடாமங்கலம் போலீஸாா், கொட்டையூா் சா்வமான்யம் பகுதியைச் சோ்ந்த கலையரசன் (30), சதீஷ்குமாா் (25), மாதவன் (32), மணிகண்டன் (23), சுந்தர்ராஜ் (21), மேலபூவனூா் சபரிநாதன் (20) ஆகிய 6 பேரை புதன்கிழமை கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...