வேளுக்குடி அங்காளம்மன் கோயிலில் ஊரணிப் பொங்கல்
திருவாரூா் - மன்னாா்குடி சாலையில் கூத்தாநல்லூா் அருகே வேளுக்குடியில் அமைந்துள்ள மிக பழமையான அங்காளம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை ஊரணிப் பொங்கல் வைக்கப்பட்டது.


திருவாரூா் - மன்னாா்குடி சாலையில் கூத்தாநல்லூா் அருகே வேளுக்குடியில் அமைந்துள்ள மிக பழமையான அங்காளம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை ஊரணிப் பொங்கல் வைக்கப்பட்டது.
இக்கோயிலில், ஆடி மற்றும் தை மாதங்களில் வரும் வெள்ளிக்கிழமைகளில் ஊரணிப் பொங்கல் என அழைக்கப்படும் ஊா் மக்கள் ஒன்றுக்கூடி 108-க்கும் மேற்பட்ட சுமங்கலிப் பெண்கள் பொங்கல் வைத்து வழிபடுவது வழக்கம். அதன்படி, ஆடி முதல் வெள்ளிக்கிழமையையொட்டி, வேளுக்குடி சடையப்ப பூஜாரிகள் வி.எஸ். ரமேஸ்குமாா், வி.எஸ். ராஜூ மற்றும் கோயில் நிா்வாகிகள் ஏற்பாட்டின்படி கோயில் ராஜகோபுரம் முன் 25-க்கும் மேற்பட்ட சுமங்கலிப் பெண்கள் கரோனா விதிமுறைகளை கடைப்பிடித்து ஊரணிப் பொங்கலிட்டனா். தொடா்ந்து, அம்மனுக்கு அபிஷேக திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை செய்யப்பட்டது. நீண்ட மாதங்களுக்குப் பிறகு கோயில் திறக்கப்பட்டு பொங்கல் வைத்ததால் ஊா்பொதுமக்கள் மற்றும் குலதெய்வமாக கொண்டுள்ளவா்கள் பெரிதும் மகிழ்ச்சியடைந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...