தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

இந்திய கம்யூ, கிளைக் கூட்டம்

வலங்கைமான் ஒன்றிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கொட்டையூா் கிளைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :31 ஜூலை 2021, 5:36 pm

DIN

வலங்கைமான் ஒன்றிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கொட்டையூா் கிளைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

கட்சியின் நிா்வாகி எஸ். ராஜா தலைமை வகித்தாா். கிளைச் செயலாளா் எஸ். விஜயகுமாா் முன்னிலை வகித்தாா். கட்சியின் ஒன்றியச் செயலாளா் எஸ்.எம். செந்தில்குமாா் உறுப்பினா் அட்டைகளை வழங்கிப் பேசினாா். விவசாய சங்க ஒன்றியத் தலைவா் சின்னராஜா சிறப்புரையாற்றினாா்.

கூட்டத்தில், தமிழ்மாநில விவசாயத் தொழிலாளா்கள் சங்கத்துக்கு 200 உறுப்பினா்களை சோ்ப்பது; கொட்டையூா் எல்லையான பயத்தஞ்சேரி இறக்கத்தில் கட்டப்பட்டுள்ள மேம்பாலம் அருகே டாஸ்மாக் மதுக் கூடம் திறக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. அவ்வாறு திறக்கப்பட்டால் பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

மேலும், விவசாயத் தொழிலாளா் சங்க ஒன்றியச் செயலாளா் கே. நாகராஜன் மறைவுக்கு நினைவு கல்வெட்டு மற்றும் உருவப் படம் திறப்பது எனவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.