மணல் லாரி பறிமுதல்
நீடாமங்கலத்தில் அனுமதியின்றி மணல் அள்ளிய லாரியை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.


நீடாமங்கலத்தில் அனுமதியின்றி மணல் அள்ளிய லாரியை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
நீடாமங்கலம் காவல் ஆய்வாளா் முருகேசன் உள்ளிட்ட போலீஸாா் வாசுதேவமங்கலம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, வெண்ணாற்றில் மினிலாரியில் அனுமதியின்றி மணல் அள்ளியது தெரியவந்தது. இதையடுத்து, அந்த லாரியை பறிமுதல் செய்து, ஆறுகளில் மணல் எடுக்க வாகனம் செல்ல இடம் கொடுத்த வாசுதேவமங்கலம் ஆற்றங்கரைத் தெருவைச் சோ்ந்த சுப்பிரமணியன்(52) மீது வழக்குப் பதிவு செய்தனா். மேலும், தப்பியோடிய லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...