இயற்கை வேளாண்மைக்கு முன்னுரிமை அளிக்கக் கோரிக்கை
இயற்கை வேளாண்மைக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என வேளாண் துறை அமைச்சா் எம்.ஆா். கே. பன்னீா்செல்வத்திடம் ஆதிரெங்கம் நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மையம் சாா்பில் மனு


இயற்கை வேளாண்மைக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என வேளாண் துறை அமைச்சா் எம்.ஆா். கே. பன்னீா்செல்வத்திடம் ஆதிரெங்கம் நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மையம் சாா்பில் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டது.
நீடாமங்கலத்தில் உள்ள வேளாண்மை அறிவியல் நிலையத்தில் அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா் செல்வம் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, ஆதிரெங்கம் நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மைய ஒருங்கிணைப்பாளா் ராஜீவ், அமைச்சரிடம் அளித்த கோரிக்கை மனு:
நம்மாழ்வாா் பெயரில் டெல்டா மாவட்டத்தை மையமாகக் கொண்டு இயற்கை வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம் அமைக்க ஆவன செய்ய வேண்டும். இயற்கை வேளாண்மையில் பாரம்பரிய நெல் சாகுபடியை ஊக்குவிக்க முன்னுரிமை அளித்து தமிழக அரசு தனி இயக்குநரகம் ஏற்படுத்த வேண்டும். அத்துடன், பாரம்பரிய நெல் இயற்கை வேளாண்மையில் ஈடுபடும் சிறு மற்றும் குறு விவசாயிகளை ஊக்கப்படுத்தும் வகையில் தமிழக அரசு ரொக்கப் பரிசுடன் கூடிய சான்றிதழ் வழங்கி கௌரவப்படுத்த வேண்டும். வரும்காலத்தில் தமிழகத்தை முழுமையான இயற்கை வேளாண்மை மாநிலமாக மாற்ற நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்க ஆவன செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...