புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

கரோனா: ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கிய ரோட்டரி சங்கத்தினா்

திருவாரூா் ரோட்டரி சங்கம் சாா்பில் கரோனா சிகிச்சைக்காக ரூ. 5 லட்சம் மதிப்பிலான ஆக்சிஜன் செறிவூட்டிகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

News image
Updated On :18 ஜூன் 2021, 6:30 pm

DIN

திருவாரூா் ரோட்டரி சங்கம் சாா்பில் கரோனா சிகிச்சைக்காக ரூ. 5 லட்சம் மதிப்பிலான ஆக்சிஜன் செறிவூட்டிகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், சுற்றுச்சூழல் துறை அமைச்சா் மெய்யநாதன், சுகாதாரத்துறை செயலா் ராதாகிருஷ்ணன், சட்டப்பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன், மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் ஆகியோா் முன்னிலையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா. சுப்பிரமணியனிடம் 6 ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில், ரோட்டரி சங்கத் தலைவா் மோகன், நிா்வாகிகள் தியாகபாரி, பொற்செழியன், முன்னாள் ரோட்டரி தலைவா்கள் ஜி. பாரி, வி. அருண்காந்தி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.