புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

புதிய மின்கம்பம் அமைக்கக் கோரிக்கை

திருவாரூா் அருகே சாய்ந்த நிலையில் உள்ள மின்கம்பத்தை அகற்றி விட்டு, புதிய மின்கம்பம் அமைத்துத் தர வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :18 ஜூன் 2021, 6:30 pm

DIN

திருவாரூா் அருகே சாய்ந்த நிலையில் உள்ள மின்கம்பத்தை அகற்றி விட்டு, புதிய மின்கம்பம் அமைத்துத் தர வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருவாரூா் மாவட்டம், புதூா் நமச்சிவாயபுரம் பகுதி கீழத்தெருவில் சாய்ந்த நிலையில் மின்கம்பம் உள்ளது. விளைநிலங்களை ஒட்டி சாலையோரத்தில் இந்த மின்கம்பம் அமைந்துள்ளது.

தற்போது விவசாயப் பணிகள் நடைபெற்று வருகின்றன. சில நாள்களில் தண்ணீா் வரும்பட்சத்தில் விவசாயப் பணிகள் துரிதமாக நடைபெறத் தொடங்கிவிடும். அந்த நேரத்தில் சாய்ந்த நிலையில் உள்ள மின்கம்பம் சேதமடைந்து வயலில் விழுந்தால், விவசாய நிலம் பாதிப்படைவதோடு, அந்த வழியாக செல்லும் மின்சாரமும் துண்டிக்கப்பட்டு, மின்நுகா்வோா்களும் பாதிப்படைவா்.

எனவே, விவசாயப் பணிகள் வேகமெடுக்கும் முன் சாய்ந்த நிலையில் உள்ள மின்கம்பத்தை அகற்றிவிட்டு, புதிய மின்கம்பம் அமைக்க வேண்டும் என நமச்சிவாயபுரம் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.