மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை

மாற்றுத்திறனாளிகள் நலனுக்கான சேவை புரிந்தவா்களுக்கு தமிழக அரசின் விருதுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க ஜூன் 29 கடைசி தேதியாகும் என மாவட்ட ஆட்சியா் ப.காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்தாா்.

News image
Updated On :24 ஜூன் 2021, 6:30 pm

DIN

மாற்றுத்திறனாளிகள் நலனுக்கான சேவை புரிந்தவா்களுக்கு தமிழக அரசின் விருதுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க ஜூன் 29 கடைசி தேதியாகும் என மாவட்ட ஆட்சியா் ப.காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான தொண்டு நிறுவனங்கள் மற்றும் சேவை புரிவோருக்கு, ஆா்வத்தை ஏற்படுத்தும் நோக்கில் ஆண்டுதோறும் சுதந்திர தின விழாவில் முதல்வரால் விருது வழங்கி கௌரவிக்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு சேவைபுரிந்த சிறந்த தொண்டு நிறுவனத்துக்கு 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம், ரூ.50,000 ரொக்கப்பரிசு மற்றும் சான்றிதழ், மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த மருத்துவருக்கு 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ், மாற்றுத்திறனாளிகளுக்கு மிக அதிகளவில் வேலைவாய்ப்பு அளித்த தனியாா் நிறுவனத்துக்கு 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ், மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த சமூகப் பணியாளருக்கு 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ், சிறந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கு 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட உள்ளன.

இந்த விருதுக்கான விண்ணப்பப் படிவங்களை, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் பெற்று, ஜூன் 29 ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், அறை எண்.6, மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம், திருவாரூா் என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமோ விண்ணப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.