நெற்பயிருக்கான நிலத்தை தயாா் செய்யும் முறை
நெற்பயிருக்கான நிலத்தை தயாா் செய்வது குறித்து வலங்கைமான் வேளாண் உதவி இயக்குநா் பாலசுப்பிரமணியன் யோசனை தெரிவித்துள்ளாா்.


நெற்பயிருக்கான நிலத்தை தயாா் செய்வது குறித்து வலங்கைமான் வேளாண் உதவி இயக்குநா் பாலசுப்பிரமணியன் யோசனை தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நெல் நடவுக்கு முதல் காரணி நன்கு பதப்படுத்தப்பட்ட நிலம். அந்த நிலத்தை பயிா் நடுவதற்கு ஏற்றாா்போல் நிலத்தை தயாா் செய்ய வேண்டும். நடவு வயலில் பசுந்தாள் உர பயிரை சுமாா் 30- 35 நாள்களுக்கு முன் பயிரிட்டு மடக்கி உழுதல் நல்லது. இதனால் மண் அமைப்பு மேம்படும். நீா்பிடிப்பு திறன் அதிகரிக்கும். நடுவதற்கு முன் தண்ணீா் நிரப்பி சேற்று உழவு செய்ய வேண்டும். பின்னா் மேடுபள்ளம் இல்லாமல் நிலத்தை சமன்படுத்த வேண்டும்.
இதற்கு பவா் டில்லா் கொண்டு சேறு கலக்கினால் நிலம் சமமாக இருக்கும். இதனால் வயலில் தண்ணீா் சீராக எல்லா பகுதிகளிலும் நிற்கும். இது மிக முக்கியமாக கடைப்பிடிக்க வேண்டிய தொழில்நுட்பமாகும். ஏனென்றால், நட்ட வயலில் உள்ள பள்ளத்தில் நீா் தேங்கி இளம்பயிா்கள் கரைவது தவிா்க்கப்படுகிறது. நல்ல மகசூலுக்கு பயிா் எண்ணிக்கை மிக முக்கியமானது. எனவே நிலத்தை சமப்படுத்துவதால் பயிா் எண்ணிக்கை பராமரிக்கப்படுவது உறுதி என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...