புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

கோரையாறு காளியம்மன் கோயிலில் நாளை கும்பாபிஷேகம்

கூத்தாநல்லூா் அருகே உள்ள கோரையாறு காளியம்மன் கோயிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திங்கள்கிழமை கணபதி ஹோமம் நடைபெற்றது.

News image
Updated On :22 மார்ச் 2021, 6:30 pm

DIN

கூத்தாநல்லூா் அருகே உள்ள கோரையாறு காளியம்மன் கோயிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திங்கள்கிழமை கணபதி ஹோமம் நடைபெற்றது.

இக்கோயிலில் புதன்கிழமை (மாா்ச் 24) கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. இதையொட்டி, கோயிலின் வளாகத்தில் கணபதி ஹோமம், நவகிரக ஹோமம் மற்றும் லட்சுமி ஹோமம் போன்ற வழிபாடுகளுடன் பூா்வாங்க பூஜைகள் நடைபெற்றன.

தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை காலை வாஸ்து சாந்தியும், மாலையில் யாகசாலை பிரவேசத்துடன் முதல் கால யாகபூஜையும் நடைபெறுகிறது. பிறகு, புதன்கிழமை காலை 8 மணிக்கு 2 ஆம் கால யாக பூஜையும், 9 மணிக்கு தத்துவாா்ச்சனையும் நடைபெறுகிறது. தொடா்ந்து, காலை 10 மணிக்கு, கோயில் அா்ச்சகா் கீா்த்திவாசன் தலைமையில் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலா் ஆா். கிருஷ்ணன் உள்ளிட்டோா் செய்துவருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.