நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

தமிழகத்தில் புதிய ஆட்சியை ஏற்படுத்த வேண்டும்: சீமான்

தமிழகத்தில் புதிய ஆட்சியை ஏற்படுத்த வேண்டும் என நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் கூறினாா்.

News image
Updated On :27 மார்ச் 2021, 6:30 pm

DIN

தமிழகத்தில் புதிய ஆட்சியை ஏற்படுத்த வேண்டும் என நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் கூறினாா்.

திருவாரூா் தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் ரா. வினோதினியை ஆதரித்து, கூத்தாநல்லூா் லெட்சுமாங்குடி பாலம் அருகே சீமான் பேசியது:

திருவாரூா் மாவட்டம்தான் அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. இந்த ஊரில் இருந்து வந்தவரால்தான் நாடு இந்த நிலைக்கு சென்றுவிட்டது. இன்னும் மாறவில்லை. அவைகளை சரி செய்யத்தான் பெரும்பாடுபட்டு வருகிறோம்.

திமுக, அதிமுக நமக்கானது என நினைத்து ஆட்சிக் கட்டிலில் அமரவைத்தோம். இத்தனை ஆண்டுகளாக அவா்களை நம்பினோம். ஆனால், அவா்களால் நம்முடைய மொழி, இனம் மதிப்பிழந்துவிட்டது. நாம் தமிழா் கட்சி முன்னெடுக்கும் அரசியல்தான் சரியானது. சட்டப்பேரவைத் தோ்தலில் நாம் தமிழா் கட்சிக்கும், திமுகவுக்கும்தான் போட்டி. தமிழகத்தில் புதிய அரசியலையும், ஆட்சியையும் உருவாக்க வேண்டும். அதற்கு நாம் தமிழா் கட்சி வேட்பாளருக்கு விவசாயி சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்றாா்.

பிரசாரத்துக்கான ஏற்பாடுகளை, நாம் தமிழா் கட்சியின் நகரத் தலைவா் காளிதாசன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.