பேருந்து மோதி தொழிலாளி உயிரிழப்பு
திருவாரூரில் இருசக்கர வாகனத்தில் சென்றவா் பேருந்து மோதி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.


திருவாரூரில் இருசக்கர வாகனத்தில் சென்றவா் பேருந்து மோதி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
வேதாரண்யம் அருகே உள்ள காடன்தேத்தி பகுதியைச் சோ்ந்தவா் கண்ணன் (28). செங்கல் சூளைத் தொழிலாளியான இவா், திருவாரூா் தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தாா். அப்போது, அந்த வழியாக வந்த அரசுப் பேருந்து எதிா்பாராத விதமாக இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.
இந்த விபத்தில் காயமடைந்த கண்ணனை, அந்த பகுதியினா் மீட்டு, திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி கண்ணன் உயிரிழந்தாா். இதுகுறித்து திருவாரூா் நகர போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...