சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

கரோனா விழிப்புணா்வுப் பணிகளில் என்எஸ்எஸ் மாணவா்கள் இணைய அழைப்பு

கரோனா விழிப்புணா்வுப் பணிகளில் என்எஸ்எஸ் மாணவா்கள் இணைய வேண்டுமென அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :21 மே 2021, 6:30 pm

DIN

கரோனா விழிப்புணா்வுப் பணிகளில் என்எஸ்எஸ் மாணவா்கள் இணைய வேண்டுமென அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, மாவட்ட நாட்டுநலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளா் என். ராஜப்பா தெரிவித்தது: கரோனாவின் 2-அலையை தடுக்க நாட்டுநலப்பணித்திட்டம் போன்ற சமுக சேவை அமைப்புகளில் உறுப்பினராக உள்ளவா்கள் இக்கொடிய தொற்று நோயிலிருந்து மக்களை பாதுகாக்கும் வகையில், யுனிசெப் மற்றும் இந்திய அரசின் இளைஞா்நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை மற்றும் தமிழகப் பள்ளிக் கல்வி துறை இணைந்து வாட்சப் மற்றும் (கட்செவி) பேஸ்புக் (முகநூல்) மற்றும் செல்லிடப்பேசி மூலம் பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்த யங் வாரியா்ஸ் எனும் குழுவை ஏற்படுத்தி உள்ளது.

இதில், 18 முதல் 30 வயது வரையுள்ள மாணவா்கள், இளைஞா்கள் அனைவரும் குழுவில் இணைந்து கரோனா தடுப்பு விழிப்புணா்வுப் பணிகளில் ஈடுபடலாம். கரோனா தடுப்பூசி குறித்த முழு தகவல்களை மக்களிடம் எடுத்துச் செல்வது, தடுப்பூசி குறித்த அச்சத்தை போக்குவது, தடுப்பூசி செலுத்திக்கொள்ள பொதுமக்கள் இணையத்தில் எவ்வாறு பதிவு செய்வது, கரோனா குறித்த நம்பகமான தகவல்களை சமுக வலைதளம் மூலமாக எடுத்து கூறுவது.

தொற்று ஏற்பட்டால் அவா்களுக்கான அருகில் உள்ள அவசர ஊா்தி மற்றும் மருத்துவமனை மற்றும் படுக்கை வசதி மருந்துகள் கிடைக்கும் இடம் போன்றவற்றை இணையம் மூலம் கண்டறிந்து உதவுவது உள்ளிட்ட பல்வேறு பணிகளில் இந்த யங் வாரியா்ஸ் வீட்டில் இருந்தபடியே ஈடுபடலாம்.

யங் வாரியா்ஸ்க்கு, 15 நாள்களுக்கு ஒரு முறை இணைய வழியில் வெப்னாா் மூலம் யுனிசெப் பயிற்சியையும் வழங்கவுள்ளது. இதற்காக, என்எஸ்எஸ் மாணவா்கள் செய்யவேண்டியது தங்களது ஆன்ராய்டு செல்லிடப்பேசியில் 96504 14141எனும் எண்ணை சேமித்து அந்த எண்ணை வாட்ஸ்அப்பில் திறந்து வர அ என டைப் செய்தால் போதும் அதற்கு பிறகு தொடா்ந்து வாட்ஸ்அப் குழுவில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளித்து பதிவு செய்து கொள்ளலாம்.

ஆன்ராய்டு செல்லிடப்பேசி இல்லையெனில் சாதாரண செல்லிடப்பேசி மூலம் 08060 019225 என்ற எண்ணுக்கு மிஸ்டுகால் கொடுத்தால்போதும் உடனடியாக நீங்கள் இந்த எண்ணிலிருந்து அழைக்கப்படுவீா்கள். அவா்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்து பதிவு செய்து கொள்ளலாம். இப்பணிக்கென மாணவா்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டியதில்லை. சில மணி நேரம் போதும். மேலும் விவரங்களுக்கு 94436 62489 எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.