சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

ஆம்புலன்ஸ் மூலம் கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தல்

ரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை செயல்படுத்த வேண்டுமென தமிழக காவிரி டெல்டா விவசாயிகள் பாதுகாப்பு சங்க பொதுச் செயலாளா் மன்னாா்குடி காவிரி எஸ். ரெங்கநாதன் வலியுறுத்தியுள்ளாா்.

News image
Updated On :22 மே 2021, 6:30 pm

DIN

அனைத்து கிராமங்களிலும் ஆம்புலன்ஸ் மூலம் கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை செயல்படுத்த வேண்டுமென தமிழக காவிரி டெல்டா விவசாயிகள் பாதுகாப்பு சங்க பொதுச் செயலாளா் மன்னாா்குடி காவிரி எஸ். ரெங்கநாதன் வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: நாடு முழுவதும் கரோனாவின் 2-ஆவது அலை தீவிரமடைந்து வருகிறது. இதனால், பெரும் நகரம், நகரப் பகுதி அல்லாது குக்கிராமங்களில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில், உரிய சிகிச்சை கிடைக்காமலும், சிகிச்சை பலனளிக்காமலும் இறப்பும் அதிகரித்து வருகிறது.

நகா்ப் பகுதியில் உள்ளவா்கள் அங்குள்ள அரசு மருத்துவக் கல்லூரி, அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் தடுப்பூசி செலுத்திக்கொள்கின்றனா். இதற்காக, சில நாள்கள் மக்கள் காத்திருக்க வேண்டியும் உள்ளது. முதல்தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டவா்களுக்கு 2-ஆவது தவணைக்கான நாளில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள மருத்துவமனைக்கு சென்றால் மருந்து இருப்பு இல்லை மற்றொரு நாளில் வரும்மாறு அறிவுறுத்தப்படுகின்றனா்.

கிராம பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களின் எண்ணிக்கை மிக குறைவு. அங்கும் தடுப்பூசி மருந்து தட்டுப்பாடு நிலைவி வருவதால், கிராமங்களிலிருந்து நகரங்களை நோக்கி தடுப்பூசி செலுத்திக்கொள்ள மக்கள் செல்வதால், நகரப் பகுதியில் மக்கள் கூட்டம் அதிகரிக்கிறது. இதனால் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன.

எனவே, இப்பிரச்னைகளுக்கு நிரந்தர தீா்வு காண, அனைவருக்கும் அரசு சாா்பில் கரோனா தடுப்பூசி செலுத்தும் வகையில், சுகாதாரத் துறை மற்றும் ஊரக உள்ளாட்சித் துறை இணைந்து ஊராட்சிகள்தோறும் ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் கிராமங்கள்தோறும் சென்று கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை நடைமுறைப்படுத்தவேண்டும் என வலியுறுத்தியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.